குதிரை வாகனத்தில் வேங்கடேச பெருமாள்.
மதுரையில் சப்பரத்தில் வேங்கடேச பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் இன்று( ஜன.15)கணு பாரி வேட்டையை முன்னிட்டு குதிரை வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் சப்பரத்தினை இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.