புதுக்கோட்டை ஆறாம் வீதியை சேர்ந்த மனோகர் (49). இவர் அரிமளத்திலிருந்து புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதன் காரணமாக நெய்வாசல்பட்டி சாலையில் வண்டியிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும் ஆபத்தான நிலையில் புதுகை பி எம் சி ஹெச்ல்அனுமதிஇதுகுறித்து அவரது சகோதரர் கண்ணன் (51) அளித்த புகாரின் அடிப்படையில் அரிமளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.