ஆலங்குடி சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த நாடிமுத்து (32). தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத விரக்தியில் ஜன.14 காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று உயிரிழந்தார். அவரது தாய் மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.