ஜெயங்கொண்டத்தில் திடீரென அறுந்து விழுந்த மின் கம்பி தெறித்து ஓடிய சாலையோர கடைகாரர்களால் பரபரப்பு.

ஜெயங்கொண்டத்தில் திடீரென அருந்து விழுந்த மின் கம்பியால் தெறித்து ஓடிய சாலையோர கடைக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-01-15 18:04 GMT
அரியலூர் (ஜன.15- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் முன்பாக காந்தி பூங்கா அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது . இந்த மின்மாற்றில் இருந்து கடைவீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இதிலிருந்து நான்கு ரோடு பகுதிக்கு செல்லும் மின் கம்பி ஒன்று திடீரென மின் கம்பி ஒயர் அறுந்து கீழே விழுந்தது. இதில் பல்வேறு இடங்களில் மின் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிப்பட்டது. மேலும் அருகில் சாலையோர வியாபாரிகள் பூக்கடைக்காரர்கள் என பலரும் தலை தறிக்க ஓடினர். அப்போது அங்கு இருந்த ஒரு பெண்ணின் மீது மின்சாரம் லேசாக தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். மேலும் இந்த மின் கம்பி அறுந்த விழுந்ததால் ஒரு தனியார் நகைக்கடை ஒன்றில் மின் பழுது ஏற்பட்டு பின்னர் அது சரி செய்யப்பட்டது. மேலும் நான்கு ரோடு அருகே மின் கம்பத்திலிருந்து தீப்பொறி பட்டு அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் தலை தெரிக்க ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்சார வாரிய ஊழியர்கள் மின் கம்பியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News