தா.பழூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்.

தா.பழூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல் செய்தனர்.;

Update: 2025-01-16 06:41 GMT
அரியலூர், ஜன.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பழூர் கடைவீதியில் உண்டியல் வசூல் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம், ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் டி.செல்வராசு, காரைக்குறிச்சி கிளை செயலாளர் வி.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். உண்டியல் வசூலின் போது பொதுமக்கள் ஆர்வத்துடனும், இன் முகத்துடனும் நிதி அளித்தனர். மொத்தம் 6.681 டிசிக்கு ரூபா.6000 பொங்கல் நாளில் தான்    அதிகமாக  நிதி வசூல் அதுவும் பகலில்  கிடைக்கிறது என்ற அனுபவத்தை அனைவரும் புரிந்துகொண்டனர். உண்டியல் வசூல் ஆனது12.30 மணிக்கு துவங்கி  2 மணிக்கு முடிக்கப்பட்டது. வசூலில் ஈடுபட்ட தோழர்களுக்கு கட்சியின் மாவட்ட குழு சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சிலால் கிராமத்தில் உண்டியல் வசூல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம் ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்களாக உண்டியல் வசூல் நடைபெற்றது.இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.செந்தில்வேல் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.உத்திராபதி, வி.குமார், கிளைச் செயலாளர் எம்.அழகேசன், கட்சி முன்னணி உறுப்பினர் காளிமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். உண்டியல் வசூலில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

Similar News