காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த கும்பக்கரை அருவி.
கும்பக்கரை அருவி;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வரும் நீர் கொடைக்கானல் உள்ளிட்ட மிக குளிர்ச்சியான பகுதிகளில் இருந்து வருவதால் குளிர்ச்சியான நீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக பொங்கல் விடுமுறையால் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல்,விருதுநகர், மதுரை, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காணும் பொங்கல் நாளை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குவிந்தனர். மேலும் பகல் ஒரு மணி அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து 5000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கும்பக்கரை அருவியில் வெறும் மனித தலைகளாக தென்பட்டது. கானும் பொங்கல் விடுமுறை நாளை கொண்டாடுவதற்காக குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீரில் குளித்தும், சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் அருவிக்கு மேல் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் காணும் பொங்கல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதால் வனத்துறையினர், மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.