பழவேற்காட்டில் கானும் பொங்கல் சுற்றுலாபயணிகள் ஏமாற்றம்
பழவேற்காட்டில் கானும் பொங்கல் கொண்டாட்டம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்காதவாறு கண்காணிப்பு பணிகள் தீவிரம் கடலில் குளிக்கவும் படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றம்;
பழவேற்காட்டில் கானும் பொங்கல் கொண்டாட்டம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்காதவாறு கண்காணிப்பு பணிகள் தீவிரம் கடலில் குளிக்கவும் படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடலில் இன்று சுற்றுலாப் பயணிகள் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கில் திரண்டனர் வங்கக் கடலில் அலை சீற்றத்தின் காரணமாக பழவேற்காடு சுற்றுலா வந்த பயணிகள் கடலுக்குள் இறங்க முடியாமல் இன்று கால்களை நனைத்துச் சென்றனர் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பழவேற்காடு கடற்கரையோரம் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர் ஒலிபெருக்கி மூலமும் ட்ரோன் மூலமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் ஊத்துக்கோட்டை பொன்னேரி ஆவடி ஆரணி திருநின்றவூர் அம்பத்தூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் பொன்னேரி காட்டூர் திருப்பாலைவனம் மீஞ்சூர் ஆவடி காவல் ஆணையரக காவல்துறையினர் மகளிர் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் போலீசார் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் உள்ளூர் மீனவர்களும் பாதுகாப்புப் பணியில் பங்கேற்றனர். பழவேற்காடு கடலில் இறங்கி குளிக்கவும் படகு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்