ஆலமர அமைப்பு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது
ஆலமர அமைப்பு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது;
ஆலமரம் அமைப்பின் 203 வது வார சிறப்பு நிகழ்வு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் பாண்டியன் நகர் தியாகி தோழர் உலகநாதன் தெருவில் நடைபெற்றது. ஆலமரம் எட்வர்ட் தேவராஜ் அவர்கள் தலைமையில். ஆலமரம் வீரபாண்டி அவர்கள் முன்னிலையில். விளையாட்டு போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்ற பெரியோர்கள் சிறியவர்களுக்கு பரிசுகள் வழங்கி முனைவர் பேராசிரியர் திருமதி பாரதி லட்சுமி அவர்கள். முனைவர் பேராசிரியர் திருமதி அமுதா அவர்கள் மற்றும் ஆலமரம் த வேலுச்சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆலமரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆலமரம் கோ புஷ்பராஜ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பை ஆலமரம் திரு ரத்தின குமார் அவர்கள் ஆலமரம் சுரேஷ் குமார் அவர்கள் செய்தனர். நிகழ்வில் கலந்து பங்களிப்பு செய்த ஆலமரம் அமைப்பின் விழுதுகள் அனைவருக்கும் பொதுமக்களுக்கும் ஆலமரம் திரு கணேஷ் அவர்கள் நன்றி கூற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.