பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது;
விருதுநகரில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.... விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கோட்டையூர் கிராமத்தில் இயங்கி வந்த சாய்நாத் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 4ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார், மீனாட்சிசுந்தரம், வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் மற்றும் காயமடைந்தவருக்கு 1 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அன்றைய தினம் முதல்வர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையும், காயமடைந்த ஒரு நபரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேரில் வழங்கினார். மேலும் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளின் கல்விச்செலவை அரசே ஏற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவர்களிடம் உறுதியளித்தார்.