கேலி கிண்டல் செய்து அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் போலீசார்வை விசாரணை

கேலி கிண்டல் செய்து அடித்ததாக காவல் நிலையத்தில் அளித்த புகார் என்பதில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2025-01-16 16:39 GMT
அரியலூர், ஜன.16- ஜெயங்கொண்டம் அருகில் உள்ள .இ.கண்டியங்கொல்லை கிராமத்தில் வசித்து வரும் பாலுசாமி மகன் ரவி (52). தான் பிறந்ததிலிருந்து ஒல்லியாக இருப்பதால் யாரும் பெண் கொடுக்க முன் வராத காரணத்தால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் கடந்த 13 ம்தேதி மதியம் வாரியங்காவல் விஜயகுமார் என்பவரின் கோழிக் கறிக்கடை அருகில் சென்று கொண்டிருந்தபோது இலையூர் தெற்குவெளியை சேர்ந்த குணசேகரன் மகன் அன்புமணி (33), மேலவெளியை சேர்ந்த செல்லத்துரை மகன் தமிழழகன் (17) ஆகிய இருவரும் ரவியை பார்த்து கேலி கிண்டல் செய்து உள்ளனர் .உடனே ரவி அருகில் சென்று ஏன் இப்படி என்னை கிண்டல் பண்ற என்று கேட்டபோது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு ரவியை இருவரும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி ரவியை செருப்பாலும் கையாளும் அடித்தும் கீழே தள்ளி கழுத்தைப் பிடித்து நெறித்து அருகில் கிடந்த கட்டையை எடுத்து முதுகில் அடித்து காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக ரவி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News