மாடுபிடி வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு குழுவினர் இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை

விளையாட்டு குழுவினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-01-16 17:47 GMT
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில ஒன்றானதும், பொங்கல் விழாவின் அங்கமாக இருப்பது ஜல்லிக்கட்டு விழா. பொங்கல் விழாவின் போதும், அறுவடை நாட்களில் தமிழ்நாடு முழுவதும் தை மாதம் தொடர்ந்து பல மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் கட்டிளம் காளையர்கள், காளைகளை அடக்கி பரிசுத் தொகையை வென்று வெற்றிவாகை சூடுகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழப்பும், உடலில் பாதிப்புகளாக, காளைமாடுகளை அடக்க செல்லும் போது, காளை மாடுகள் மிதிப்பதாலும், தீட்டப்பட்ட கூர்மையான கொம்புகளை கொண்டு குத்துவதாலும், தூக்கி எறியப்படுவதால் மாடு பிடி விரர்களுக்கு, தலை, கழுத்து, தண்டுவடம், நெஞ்சு, அடிவயிறு, பிறப்புறுப்பு, கால் பகுதிகளில் காயங்களோ, எலும்பு முறிவு உள்ளிட்ட சேதங்களோ ஏற்படுகிறது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டாலும், ஏழை எளிய இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிப்படுகின்றனர். அவர்கள் குடும்பம் நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில், காளைகளை அடக்க சென்று பாதிக்கப்படும் இளைஞர்களின் குடும்பத்தினர் பாதிக்காத வகையில், முன்னதாகவே, ஜல்லிக்கட்டு குழுவினர் இன்ஸ்சூரன்ஸ் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், அவர்களது, குடும்பத்திற்கு பாராமாக இல்லாமல், மாதாமாதம் மருத்துவ செலவு உள்ளிட்ட செலவுகளை பெற ஏதுவாக இருக்கும் என்பதோடு, மட்டுமில்லாமல், தற்போது கடந்த பொங்கலின் போது மதுரை அவனியாபுரத்தில் மாடு முட்டியதில் இறந்த நவீன் என்பவருக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்திய நிலையில், ஜல்லிகட்டு குழுவினர் இன்ஸ்சூரன்ஸ் செய்திருந்தால், அந்த குடும்பம் அரசை எதிர்நோக்காமல், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தினடம் இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொண்டிருக்க முடியும். போராட்டம் தேவையற்றதாக இருந்து இருக்கும். எனவே, இனி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு விழாக்குழுவினர்கள் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளுக்கும் சேர்த்து இன்ஸ்சூரன்ஸ் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News