காவல்துறை முன்னிலையில் அரிவாள் வெட்டு ஒருவர் பலி

உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.;

Update: 2025-01-17 06:32 GMT
பெரம்பலூர் அருகே காவல்துறை முன்னிலையில் அரிவாள் வெட்டு ஒருவர் பலி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு நேற்று இரு சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. ஏ இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற கொண்டிருக்கும் பொழுதே தேவேந்திரன் என்பவர் மணி என்பவரை வெட்டியுள்ளார். இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார், இதனை தொடர்ந்து கைகளத்தூர் காவல்துறையினர் தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிர் இழந்த மணியின் உறவினர்கள் கைகளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News