இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி;
தாராபுரம் அருகே உள்ள ரெட்டார வலசு கிராமத்தில் உள்ள புளிய வலசு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65) தொழிலாளி.இவர் தனது இருசக்கர வாகனத்தில் புளிய வலசு பகுதியில் இருந்து பகவான் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தாராபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.