தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்த எம்எல்ஏ
பென்னாகரம் தொகுதி நல்லாம்பட்டி கிராமத்தில் தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா பென்னாகரம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லாம்பட்டி, கெட்டூர் தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசியாக நேற்று மாலை ஜனவரி 17 துவங்கியது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர்மான ஜி கே மணி கலந்து கொண்டார் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டங்கள் கட்டி சிறப்பு முதல் மரியாதை செய்யப்பட்டது சுவாமி தரிசனம் செய்த எம்எல்ஏ பின்பு விழா குழுவினர் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் தேர் திருவிழாவை வடம் பிடித்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் நல்லாம்பட்டி, கெட்டுர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமாக மாபெரும் கூட்டமாக கலந்துகொண்டனர்.