ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்டியல் வசூல்.
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்டியல் வசூல் செய்யப்பட்டது.;
அரியலூர், ஜன.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிகளில் உண்டியல் வசூல் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் டி.தியாகராஜன், ஆர்.ரவீந்திரன், ஆர்.சொக்கலிங்கம், பி.பத்மாவதி, ஆர்.ராமலிங்கம், ஆர் வீரப்பன், ஆர்.கலியமூர்த்தி, செல்வம், தமிழ்ச்செல்வன், கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். உண்டியல் வசூலின் போது பொதுமக்கள் ஆர்வத்துடனும், இன் முகத்துடனும் நிதி அளித்தனர். மொத்தம் பத்தாயிரத்து நூறு நிதி வசூல் செய்யப்பட்டது. இதில் ஒன்றிய கமிட்டியிடம் 8,400 ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக வசூலில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கு கட்சியின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.