காங்கேயம் அருகே தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
காங்கேயம் அருகே மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்கு போட்டு தற்கொலை;
காங்கேயம் அடுத்துள்ள சேடாங்கி பாளையத்தைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 80). இவருக்கு 10 ஆண்டுகளாக மூட்டு வலி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சேமியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.