வாலிபர் மீது தாக்குதல் தாய் மாமா கைது
வெள்ளகோவில் அருகே வாலிபர் மீது தாக்குதல் தாய் மாமா கைது;
வெள்ளகோவில் லக்கநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது 34). லக்னநாயக்கன்பட்டியில் இவரது தாய் மாமா விஸ்வநாதன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கார்மேகத்தின் தாயார் கார்மேகத்திடம் தகவல் சொல்லாமல் அவரது தம்பி விஸ்வநாதன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் தாய் மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கார்மேகத்தை அவரது தாய் மாமா விசுவநாதன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கார்மேகம் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வெள்ளகோயில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசுவநாதனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.