பில் கட்ட உன்னிடம் பணம் இருக்கா? : வாடிக்கையாளர் தர்ணா போராட்டம்
உணவகத்தில் உணவு அருந்த வந்த வாடிக்கையாளர் அணிந்து வந்த உடையை பார்த்து அதிக அளவில் ஆர்டர் கொடுக்கிறீங்க சாப்பிட்டால் பில் கட்ட உன்னிடம் பணம் உள்ளதாக என ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்டதால் வாடிக்கையாளர் தரையில் அமர்ந்து தருண போராட்டம்;
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் அமைந்துள்ள நித்ய அமிர்தம் சைவ உணவகத்தில் உணவு அருந்த வந்த வாடிக்கையாளர் அணிந்து வந்த உடையை பார்த்து அதிக அளவில் ஆர்டர் கொடுக்கிறீங்க சாப்பிட்டால் பில் கட்ட உன்னிடம் பணம் உள்ளதாக என ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்டதால் வாடிக்கையாளர் தரையில் அமர்ந்து தருண போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சிவிநாயுடு சாலையில் நித்ய அமிர்தம் சைவ உணவகம் உள்ளது, இங்கு சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக திருத்தணி, திருப்பதி, போன்ற பகுதிகளுக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் இங்கு சாப்பிட்டு செல்வது வழக்கம், கடந்த 1 வருடத்திற்கு முன்பு திறக்கப்பட்ட இந்த உணவகம் முக்கிய சாலையில் இருப்பதோடு, கார் பார்க்கிங் வசதியும் இருப்பதால் பெரும்பாலானோர் இந்த ஓட்டலில் சாப்பிட்டு செல்வதுண்டு. இந்நிலையில் திருவாலங்காடு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும் வழக்கறிஞருமான, விஷ்ணுவரதன், என்பவர் உறவினர்களுடன் ஓட்டலில் சாப்பிட வந்துள்ளார். அப்போது சாப்பிடுவதற்கு தேவையான உணவு வகைகளை ஆர்டர் செய்த போது, சப்ளை செய்யும் பணி பெண் ஒருவர் இவ்வளவு ஆர்டர் தர்றீங்களே... பணம் இருக்கா என கேட்டுள்ளார். வழக்கறிஞர் விஷ்ணுவரதன் கருப்பு நிற பனியன், கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்ததால்,அவர் உடையை பார்த்து அவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, விஷ்ணுவரதன் ஓட்டலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விஷ்ணுவரதனிடம், விசாரணை செய்தனர். அப்போது, சாப்பிடுவதற்காக ஆர்டர் செய்ததாகவும், அப்பொழுது சப்ளை செய்யும் பெண் ஒருவர் என் உடையை பார்த்து என்னை அவமதிக்கும் வகையில், இவ்வளவு ஆர்டர் தர்றீங்களே... உங்களிடம் பணம் இருக்கா என கேட்டதாகவும், ஹோட்டலில் அமைந்திருந்தவர்களுக்கு முன்பாக தன்னை அவமதித்ததால் ஆத்திரமடைந்து நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஓட்டல்நிர்வாகத்தினர் பிரச்சினைக்கு காரணமான பெண்ணை வெளியில் அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தகராறில் ஈடுபட்டதால் நான் வேண்டுமானால் மன்னிப்பு கேட்கிறேன் என சொல்லி பத்திரிகையாளர்களின் முன்னிலையில் ஓட்டல் மேனேஜர் வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்டதால் அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் ஓட்டல் அருகே சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.