ஜெயங்கொண்டம் - பெண் சப் இன்ஸ்பெக்டர் கண்ணில் கதண்டு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை
ஜெயங்கொண்டம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை கதண்டு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்*;
அரியலூர், ஜன.20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக உமாதேவி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பகுதியில் போலீஸ் நிலைய அலுவல் சம்பந்தமாக சென்று விட்டு மீண்டும் ஜெயங்கொண்டம் வருவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாரியங்காவல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டரின் ஹெல்மெட்டுக்குள் புகுந்த கதண்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உமாதேவியின் கண்ணில் கடித்ததில் கண்ணில் காயம் அடைந்தார். இதனையடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உமாதேவி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.