இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-01-20 13:17 GMT
அரியலூர், ஜன.20- அரியலூர் மாவட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்து பேசினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு போட்டியிடும் பாலாஜி மற்ற அனைத்து பொறுப்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார். கூட்டத்தில், அனைத்து இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பதவிகளுக்கு போட்டியிடும் இளைஞர்களை வெற்றிப் பெற வைப்பது, அரியலூர் ரயில் நிலையத்தில், அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் மனோகரன், வட்டாரத் தலைவர்கள் திருநாவுக்கரசு, பாலகிருஷ்மன், அழகானந்தம், கிராம காங்கிரஸ் கமிட்டி தொகுதி பொறுப்பாளர்கள் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நகர தலைவர் மா.மு.சிவகுமார் வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் நகர  தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.

Similar News