பெரியவடவாடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அவசர சிகிச்சை விழிப்புணர்வு முகாம்

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடந்தது;

Update: 2025-01-20 14:24 GMT
போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தவிர்ப்பது, மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குவது போன்றவைககை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக ஜனவரி 1 முதல் 31 வரை ஒரு மாத காலம், தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே பெரியவடவாடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில், அவசர சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு விபத்தில் அடிபட்டவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள், பிரசவத்திற்கு செல்வோர் போன்றவர்களுக்கு முதலுதவி அளித்து, ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு செல்வது குறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர் இந்த முகாமில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News