ஸ்ரீரங்கபுரம் கிராமம் கம்மவார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

கும்பாபிஷேகம்;

Update: 2025-01-20 14:31 GMT
தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ஆலய வளாகம் அருகே யாகசாலையில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பலவித மூலிகை பொருட்கள் கொண்டு பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பாக யாகம் வளர்க்கப்பட்டது தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது வேதாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கலச நிலை தலையில் சுமந்து கொண்டு ஆலய வளாகத்தை சுற்றி வந்து கலசத்தை அடைந்தனர் பின்னர் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின் கலச நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது பின்னர் இதில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்கள் மீது புனித கலச நீர் தெளிக்கப்பட்டது இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நாகலாபுரம் வெங்கடசலபுரம் கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தரிசித்துச் சென்றனர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News