திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்து ஆலோசனை;
அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரித படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கி பேசினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் SM.பாலன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் R.சந்திரசேகர், மாவட்ட கழக அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.