ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் கட்சி கொடியினை போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் ஏற்றி வைத்தார்
ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் கட்சி கொடியினை அரியலூர் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சருமான சா. சி. சிவசங்கர் கொடியேற்றி வைத்தார்;
அரியலூர், ஜன.21 - ஜெயங்கொண்டம் திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில்,மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர் தலைமையில்,திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோரின் முன்னிலையில், அரியலூர் மாவட்ட செயலாளரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் சிவசக்தி மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ள ஒன்றிய அலுவலகத்தின் முன் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.