திருப்பத்தூரில் சிறை நிரப்பும் போராட்டம்!
திருப்பத்தூரில் மாற்று திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்!;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகை உயர்த்தக்கோரியும் சிறை நிரப்பும் போராட்டம்-100க்கும் மேற்பட்டோர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்தொகை வழங்குவது போல உதவித்தொகை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ரங்கசாமி, காசி, காமராஜ், ஆனந்தன், சிங்காரம், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் 100 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.