இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தென்காசி மாவட்ட ஜனநாயக பீடித் தொழிலாளா் சங்கம் சாா்பில், ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து முறையிடும் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோவை அச்சங்கத்தினா் சந்தித்து, ‘ஆலங்குளத்தில் வீடு இல்லாத ஏழை எளியோருக்கும், பீடித் தொழிலாளா்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனா். மொத்தம் 138 மனுக்கள் அளிக்கப்பட்டன. இப்போராட்டத்தில் பீடி தொழிலாளா் சங்க ஆலங்குளம் வட்டாரப் பொறுப்பாளா் மாரியப்பன், நிா்வாகிகள் ராமா் பாண்டியன்,உதயக்குமாா், சங்கர பாண்டியன் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.