நடமாடும் நெல் கொள்முதல் முறையை

நடப்பாண்டும் நடைமுறைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

Update: 2025-01-21 12:36 GMT
நாகை மாவட்டம் திருமுருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த விவசாயி பி.சுப்பிரமணியம், நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷிடம் கொடுத்துள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருமருகல், கீழப்பூதனூர், பெருநாட்டான் தோப்பு, இடையாத்தாங்குடி, சேஷமூலை, திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, பில்லாளி, கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், நடப்பாண்டு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக, சம்பா நெற்பயிர் பாதிக்கப்பட்டாலும் எஞ்சியுள்ள நெற்பயிரை விவசாயிகள் அறுவடை செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில், நடமாடும் கொள்முதல் நிலைய வாகனங்கள், விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்து சென்றன. இதனால், மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை செலவு குறைவாக ஆனது. நடமாடும் நெல் கொள்முதல், விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் கையூட்டு இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, நடப்பாண்டும் நடமாடும் நெல் கொள்முதல் முறையை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News