குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நல்லூர் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (59). அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரதீஷ் (23), நவீன் (23, அஜித் (27). இவர்கள் சம்பவ தினம் 3 பேரும் கரவிளாகம் பகுதியில் நடுரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை கெட்ட வார்த்தைகள் பேசி வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற ராபின்சன் அசிங்கமாக பேசியதை அவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீஷ், நவீன், அஜித் ஆகியோர் சேர்ந்து கட்டையால் ராபின்சனை சரமாரியாக அடித்தார்கள். இதில் படுகாயம் அடைந்த ராபின்சன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பிரதீஷ், நவீன், அஜித் ஆகியவர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.