ரோட்டின் ஓரத்தில் இருந்த ஆலமரம் முறிந்து விழுந்ததில் முதியவர் சாவு

கீரையை விற்பனை செய்து விட்டு திரும்பிச் சென்றபோது பரிதாபம்

Update: 2025-01-21 18:12 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாண்டூர் அருகே உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்த குள்ள படையாச்சி மகன் விநாயகம்(60). இவர், இன்று 21-ஆம் தேதி அதிகாலை கீரை வியாபாரம் செய்வதற்காக விருத்தாசலம் சென்று கீரைகளை கொடுத்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனூர் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு சென்றபோது, ரோட்டின் ஓரத்தில் இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று தானாக ரோட்டின் குறுக்காக முறிந்து, அவ்வழியாக இரு வாகனத்தில் வந்த விநாயகத்தின் மீது விழுந்ததில் விநாயகம் மரத்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி உதவியுடன் இறந்தவரின் உடலை மீட்டனர். மங்கலம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார விநாயகத்தின் பிரேதத்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News