தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல்
வேலைவாய்ப்பு முகாம்;
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.1.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வி தகுதி உடையவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு ஐடிஐ, பட்டய படிப்பு, இளநிலை பட்டப்படிப்புகள் நர்சிங் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் தங்களது பெரியார் விபரத் நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 7904706709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்