வாணியம்பாடியில் எருது விடும் விழா
வாணியம்பாடியில் எருது விடும் விழாவில் 200 கும் மேற்ப்பட்ட காளைகள் சீரி பாய்ந்து ஓடின!;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெகுவிமர்சையாக நடைப்பெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான எருதுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு... திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் மற்றும் மயிலர் பண்டிகையொட்டி மாபெரும் எருது விடும் விழா நடைப்பெற்றது, இந்த எருது விடும் விழாவினை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர், அஜிதாபேகம், வட்டாச்சியர் ஆகியோர் உறுதி மொழி ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த எருது விடும் விழாவில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, குப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 250 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற, குறிப்பிட்ட எல்லையை, குறைந்த மணி துளிகள்கள் அடைய சீறிப்பாய்ந்தது, இந்த எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா எருது விடும் விழாவை நேரில் ஆய்வு செய்தார்..