அரசு மருத்துவமனை மற்றும் லெப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திடீர்

சிகிச்சைபெற வந்திருந்த கர்ப்பிணி பெண்களிடம், இங்கு வழங்கப்படும் சிகிச்சை எவ்வாறு உள்ளது, மருத்தவர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்கின்றார்களா என கேட்டறிந்தார்;

Update: 2025-01-21 16:58 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் லெப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் லெப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (21.01.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். அதன்படி இன்று வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் உள்ள உள் நோயாளி பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், எக்ஸ்ரே, நுண்கதிர் பிரிவு, ஆய்வகம், பேறு கால பெண்களுக்கான கண்காணிப்பறை, ஸ்கேன் அறை, அறுவை சிகிச்சை அரங்கம், தனி வார்டு, கழிவறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளிடம் அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு விரைவான, தரமான மருத்துவ சேவைகளை மேற்கொள்ள மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளரிடம் அறிவுறுத்தினார். பின்னர் மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், வருகை பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்து மருத்துவமனை வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுறித்தினார். தொடர்ந்து, லெப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிகிச்சைபெற வந்திருந்த கர்ப்பிணி பெண்களிடம், இங்கு வழங்கப்படும் சிகிச்சை எவ்வாறு உள்ளது, மருத்தவர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்கின்றார்களா என கேட்டறிந்தார். மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்பாது, இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஜெயந்தி, உதவி முதன்மை மருத்துவ அலுவலர்கள் மரு.மோனிஷா மரு.கோபி கண்ணன், உதவி மருத்துவர் (சித்தா) செந்தில்குமார் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News