மாணவர்கள் சாதனை தாளாளர் பாராட்டு

தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் சர்வதேச கருத்தரங்கில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா;

Update: 2025-01-21 17:14 GMT
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், சர்வதேச கருத்தரங்கில் முதலிடம் பெற்ற மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு வேந்தர் வாழ்த்து தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகடெமியின் (ஐ சி டி அகடெமி ) சார்பில் மதுரையில் பிரிட்ஜ் 2024 இன் 59- வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. "டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல்" என்பதே இந்த கருத்தரங்கின் கருப்பொருள் ஆகும். இந்த கருத்தரங்கில். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், ஐசிடி அகாடமி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக "இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் ஃபினிஷிங் ஸ்கூல் ஃபார் எம்ப்லாயபிலிட்டி என்ற பயிற்சியும் மற்றும் ". “டிசைன் துறையில் ” ஆட்டோடெஸ்க் மூலம் பயிற்சியும் வழங்க இரண்டு எக்சலென்ஸ் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அந்தவகையில் - இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் ஃபினிஷிங் ஸ்கூல் ஃபார் எம்ப்லாயபிலிட்டி என்ற திட்டத்தின் துவக்க விழா 28/10/2024 அன்று நடைபெற்றது. அந்த திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில், சி எஸ் இ, இ சி இ , இ இ இ, ஐ டி, எஐ டி எஸ் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்கள் 63 பேர் பங்கெடுத்து தேர்ச்சிபெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 18, 2024 அன்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில், இ சி இ துறையில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் முகமத் ஜாவித் மற்றும் பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றனர். தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் சர்வதேச கருத்தரங்கில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா 21/01/2025 அன்று நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் இந்த விழாவுக்கு தலைமை வகித்தார். முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் முதலிடம் பெற்ற நமது மாணவர்களுக்கும் மற்றும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் ஃபினிஷிங் ஸ்கூல் ஃபார் எம்ப்லாயபிலிட்டி என்ற திட்டத்தில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் ஃபினிஷிங் ஸ்கூல் ஃபார் எம்ப்லாயபிலிட்டி, என்ற இந்த திட்டமானது, இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு உன்னதமான திட்டமாகும். இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ள தற்போதைய சூழலில் , வெறும் கல்வி அறிவு மட்டும் ஒரு சிறந்த வேலையை பெற நிட்சயமாக போதாது என்பது நிதர்சமான உண்மையாகும். நம் மாணவர்கள், நிஜ-உலகத் திறன்கள், நடைமுறை அனுபவம் மற்றும் தொழில்துறை நுண்ணறிவு போன்றவற்றை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும். இந்தத் திட்டம் மாணவர்களுக்கு தேவையான திறன்களை வளர்க்க பெரிதும் உதவும் ஒரு சிறந்த திட்டமாகும். நமது மாணவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் நன்றாக பயன்படுத்திக் கொண்டு, டேட்டா அனலிடிக்ஸ் என்ற பாடத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். விடாமுயற்சியுடன் கற்றுக்கொள்ளுங்கள், எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுங்கள், மேலும் ஒவ்வொரு சவாலையும் ஏற்று கொள்ள தயாராக இருங்கள். இந்த திட்டம் மூலம் நீங்கள் பெற்ற திறன்கள் உங்கள் வேலைவாய்ப்பிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சமூக வளர்ச்சிக்கு, ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் உதவும் என்று நம்புகிறேன். இன்ஃபோசிஸ் அறக்கட்டளை மற்றும் ஐசிடி அகாடமி நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார் இந்த விழாவில் ஐ சி டி அகாடெமியின் மாநில தலைவர் பூர்ண பிரகாஷ் , திவ்ய பிரசாந்த் ,தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் துணை மேலாளர் ஐ சி டி அகாடெமி, அவர்கள் மற்றும் அல்டாப் ஹுசைன் , மூத்த தொழில்நுட்ப பயிற்சியாளர், ஐ சி டி அகாடெமி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். முதல்வர் முனைவர் சண்முகசுந்தரம், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், புலமுதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Similar News