தேய்பிறையில் கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடு
மஞ்சள் பால் தயிர் சந்தனம் திருநீர் மலர்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார ஆராதனை;
பெரம்பலூர் செக்கடி எடத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்தகுந்தலாம்பிகை சமேத கைலாசநாதர் ஆலயத்தில் தை மாத தேய்பிறை முன்னிட்டு மஞ்சள் பால் தயிர் சந்தனம் திருநீர் மலர்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.