தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

ஓட்டுனர்களுக்கான கண் பரிசோதனை முகாமில் சுமார் 260க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-22 08:11 GMT
பெரம்பலூர் மாவட்டம் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையின் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, ஆகியோர் இன்று (22.01.2025) தொடங்கி வைத்தனர். “விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட துறையின் மூலம் 36வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து காவல்துறை சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை உடன் இணைந்து ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடத்தப்பட்டது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தொடங்கி வைத்து, கண் பரிசோதனை செய்ய வந்த ஓட்டுநரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தும் படி கண் கண்ணாடிகளோ அல்லது மருத்துவ சிகிச்சைகளோ மேற்கொண்டு, சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கிட வேண்டும் என அறிவுறித்தினர். ஓட்டுனர்களுக்காக இதுபோன்று நடத்தப்படும் கண் பரிசோதனை சிறப்பு முகாமினை ஓட்டுனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாம் குறித்து மற்ற ஓட்டுனர்களிடமும் தகவல் தெரிவித்து பங்கேற்று பயன்பெற செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஓட்டுனர்களிடம் தெரிவித்தார். இந்த ஓட்டுனர்களுக்கான கண் பரிசோதனை முகாமில் சுமார் 260க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். கண் பரிசோதனைக்கு வந்திருந்த ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களையும், மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ).கே.ரவி, வட்டாட்சியர் சரவணன், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர், காவல் துறையினர்கள், மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் மற்றும் இதர வாடகை வாகன ஓட்டுநர்கள் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News