டால்மியா சிமென்ட் ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது

டால்மியா சிமென்ட் ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானதால் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-01-22 08:43 GMT
அரியலூர்,ஜன.22- அரியலூர் மாவட்டம், டால்மியா சிமென்ட் ஆலையில், இயந்திரத்தில் தொழிலாளியின் கை சிக்கி துண்டானதையடுத்து உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன்(34). இவர் அரியலூர் அடுத்த ஓட்டக்கோவில் கிராமத்திலுள்ள டால்மியா சிமென்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் பணியில் இருந்த போது, எதிர்பாரதவிதமாக இயந்திரத்தில் அவரது ஒரு கை சிக்கி, துண்டிக்கப்பட்டது. சக ஊழியர்கள் அவரை மீட்டு, திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை டால்மியா சிமென்ட் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அறிவழகன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், அறிவழகன் கை துண்டானதுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது பணியை நிரந்தரம் செய்ய  வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து சென்ற அரியலூர் காவல் துறையினர் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Similar News