போக்குவரத்து துறை அமைச்சர் அரியலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டியை முடித்து வைத்து பரிசுகள் வழங்கினார்.
ஜெயங்கொண்டம் நகரில், திமுக சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் இறுதி போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் முடித்து வைத்து பரிசுகள் வழங்கினார்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் நகரில், திமுக சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியின், இறுதி போட்டியினை திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் ,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ,நகர கழக செயலாளர்,நகராட்சி துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்.கலியபெருமாள், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க.இராமகிருஷ்ணன்,மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் இளங்கோவன்,மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் புனிதவேல், போட்டி ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பிரதிநிதி பிரபு (எ) .பிரபாகரன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.