குமரி :  போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கருங்கல்

Update: 2025-01-22 09:27 GMT
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதி சேர்ந்தவர்  சந்திரன் (54). இவர் தற்போது கருங்கல் அருகே  மத்திகோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மகள் ஐஸ்வர்யா (21). நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்.        ஐஸ்வர்யா முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த போது அவருக்கும் புதுக்கடை அருகே மாராயபுரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (22) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. மாணவ பருவத்தில் ஏற்பட்ட காதல் ஐந்து ஆண்டுகளாக நீடித்தது. இந்த நிலையில் சம்பவ தினம் ஐஸ்வர்யா வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை.           இது குறித்து சந்திரன் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தேடி வந்தனர். இதற்கு இடையே ஐஸ்வர்யா காதலன் ஸ்ரீகாந்துடன் கிராத்தூர் நாகராஜா கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு, பின்னர் போலீஸ் தேடுவது அறிந்து நேற்று 21-ம் தேதி மாலை  கருங்கல் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.         போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காதல் ஜோடி சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். இதை தொடர்ந்து இருவரும் மேஜர் என்பதால் போலீசார் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

Similar News