தேனியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியனர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
மறியல்
கம்யூனிஸ்ட் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் கம்யூனிஸ்ட் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓராண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் கடந்த 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை பண பலன் வழங்கவில்லை என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தேர்தல் வாக்குவதில் கூறிய நிலையில் தற்போது வரை அதை அமல்படுத்தவில்லை என்றும் 30 ஆயிரம் காலி பணியிடங்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்களாமேடு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது