உணவகம் ஒன்றில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற இரண்டு நபர்களை கைது

கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணம் ரூபாய். 14,000 பணத்தை திருடிய நபர்களை கைது செய்த பெரம்பலூர் காவல் துறையினர்.

Update: 2025-01-22 14:14 GMT
உணவகம் ஒன்றில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற இரண்டு நபர்களை கைது பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு ரோடு எதிரே உள்ள தோசா இன்பினிட்டி என்ற உணவகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் (ஸ்கூட்டியில்) வந்த இரண்டு நபர்கள் கல்லாவில் அமர்ந்திருந்த நபர் மற்றும் வாட்ச்மேன் ஆகியோர்களை கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணம் ரூபாய். 14,000 -த்தை திருடி சென்று விட்டதாக உணவகத்தின் வரவேற்பாளர் பாலமுருகன் என்பவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேற்படி வழக்கினை விசாரணை செய்த பெரம்பலூர் காவல்நிலைய உதவி ராம்குமார் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 1.ரமேஷ் (18) த/பெ கோவிந்தசாமி, விளாமுத்தூர், பெரம்பலூர். 2.பிரகாஷ் (20) த/பெ சுப்பிரமணியன் விளாமுத்தூர், பெரம்பலூர். ஆகிய இருவரையும் கைது செய்து இன்று 22.01.2025-ம் தேதி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

Similar News