ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா: விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள் மற்றும் தேசிய கணித நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2025-01-22 14:44 GMT
ஜெயங்கொண்டம் ஜன.23- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை சார்பில் கல்லூரி முதல்வர் இரமேஷ் வழிகாட்டுதலின்  பேரில் கணித மேதை இராமானுஜம் பிறந்தநாள், தேசிய கணிதநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து இளநிலை கணிதம் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கிவைத்தார். போட்டிகளில் வெற்றிபெற்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் பங்குபெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் இராசமூர்த்தி ஒருங்கிணைத்தார். முடிவில் கணிதத்துறை தலைவர் முனைவர் நந்தகுமார்  நன்றி கூறினார்.

Similar News