ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வினா விடை தொகுப்பு புத்தகம் வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்.
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை வெல்வோம் பொதுத் தேர்வை வெல்லும் வகையில் வினா விடை சிறப்பு தொகுப்பு புத்தகத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சாசி சிவசங்கர் வழங்கினார்;
அரியலூர், ஜன.23- முப்பதாயிரம் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வை வெல்வோம் என்ற வினா விடை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார் . அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தேர்வை வெல்வோம் வினா விடை தொகுப்பு புத்தகம் கடந்த வருடம் குன்னம் தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார் இந்நிலையில் இவ்வருடம் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை வெல்வோம் என்ற வினா விடை அடங்கிய தொகுப்பு புத்தகத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வணங்கி அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கூறினார் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொது தேர்வு தேர்ச்சி பட்டியலில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் கடைசி இடங்களை பெற்று வந்தன. இந்நிலையில் கல்வித்துறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் கடந்த வருடம் வழங்கிய தேர்வை வெல்வோம் புத்தகத்தின் காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து முதல் ஐந்து இடங்களில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது கடந்த வருடம் குன்னம் தொகுதிக்கு மட்டும் வழங்கப்பட்ட இப் புத்தகம் இவ்வருடம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 30 ஆயிரம் மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முதல் கட்டமாக குன்னம் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் இப்ப புத்தகம் வழங்கப்பட்டு முடிவடைந்தது ஜெயங்கொண்டம் அரியலூர் பெரம்பலூர் தொகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் தேர்வை வெல்வோம் வினா விடை புத்தகம் வழங்க ப்படும் என கூறினார் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எவ்வித அச்சமும் இன்றி தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்றுப் பேசினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கியநாதன் முன்னிலை வகித்து பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் லூயிகதிரவன், நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி குமார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் என பலரும் கலந்து உள்ளனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் நீதி நன்றி கூறினார்.