ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
அரியலூர், ஜன.24- அரியலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தலைவர் சிவசாமி தலைமை தாங் கினார். செயலாளர் நல்லதம்பி, செயல் தலைவர் வடமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதியின் படி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு தொகையை ரூ.22 லட்சமாக உயர்த்தி வழங்கவும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் மருத்துவப்படியை ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங் கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.