வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மு.ஆசியா மரியம்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், தலைமையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தெரிவித்ததாவது:பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும். துறை அலுவலர்கள் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி பணிகளை முடித்திட வேண்டும். தொடர்ந்து கள ஆய்வு செய்து ஏதேனும் தொய்வு இருப்பின் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தெரிவித்தார். மேலும், வேளாண்மை - உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / கேட்டறிந்தார்.தொடர்ந்து, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், இ-நாம் செயலி, இ-வாடகை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பணிகள், பட்டா கோரி நிலுவையில் உள்ள மனுக்கள், பள்ளி உட்கட்டமைப்பு பணிகள், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம், மக்களுடன் முதல்வர், நான் முதல்வன் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பள்ளி செல்லா குழந்தைகள் மீண்டும் பள்ளி செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களைத்தேடி மருத்துவம், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, மாநகராட்சி ஆணையாளர் இரா.மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.வீ.பழனிவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச்சாலை) கோட்ட பொறியாளர் அகிலா, ஆவின் பொது மேலாளர் மரு.சண்முகம், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) சசிகலா, துணை இயக்குநர் (காசநோய்) மரு.வாசுதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன் ஆகியோர் உட்பட வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.