ஆண்டிபட்டி அருகே சமுதாயக்கூடம் மற்றும் உயர்மட்ட நீர் தேக்க தொட்டியை எம்எல்ஏ .மகாராஜன் திறந்து வைத்தார்.
ரூபாய் 18. 42 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட நீர் திறக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில புதிய சமுதாயக்கூடம் திறப்பு;
ஆண்டிபட்டி அருகே சமுதாயக்கூடம் மற்றும் உயர்மட்ட நீர் தேக்க தொட்டியை எம்எல்ஏ .மகாராஜன் திறந்து வைத்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் காலனி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு , அதனை ரிப்பன் வெட்டி எம்எல்ஏ. மகாராஜன் திறந்து வைத்தார். அதேபோல் ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி காலனி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 18. 42 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட நீர் திறக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ. மகாராஜன் திறந்து வைத்தார். இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆண்டிபட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் கழக செயலாளர் பூஞ்சோலை சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சுரேஷ் ,மணி, கோவிந்தராஜ் உள்பட கட்சியினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.