ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்.

பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார் .நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார் .;

Update: 2025-01-25 15:52 GMT
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடை போக்குவோம் என்ற தலைப்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார் .நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார் .பள்ளியின் செயலாளர் மாத்யூஜோயல் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றத்தை பற்றி பேசினார். அவர் உங்கள் கனவுகளை நீங்களே பெரிதாக மெய்ப்பிக்கவும் ,உங்கள் முயற்சியில் உலகை மாற்றவும் முடியும் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் .மேலும் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி பேசும்போது பெண்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய கருத்துக்களை கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச் செல்வி,திவ்யா ஆகியோர் செய்து இருந்தனர் .நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Similar News