கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு அரசு சிலை அமைக்க தவறினால் போராட்டம் நடத்தி சிலை அமைப்போம் ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு அரசு சிலை அமைக்க தவறினால் போராட்டம் நடத்தி சிலை அமைப்போம் என செய்தியாளர்களிடம் ஸ்ரீதர் வாண்டையார் தெரிவித்தார்.;

Update: 2025-01-26 04:56 GMT
அரியலூர், ஜன.26 - ஜெயங்கொண்டத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி_ அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி தலைவர் இளையராஜா இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- கங்கை வரை படையெடுத்து கடாரம் வரை வென்று வரலாற்று சிறப்புமிக்க தலைவன் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவுருவச் சிலை இல்லை. அவருக்கு உருவம் இல்லை என அமைச்சர் கூறுவது சரியல்ல. திருவள்ளுவருக்கு எப்படி உருவமில்லாமல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறதோ அதேபோன்று மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கோயில் வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும். அரசு சிலை அமைக்கத் தவறினால் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஒன்றிணைந்து 120 அடி உயரத்தில் சிலை அமைப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், வருகின்ற சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது, அப்போதைய சூழலை ஒப்பிட்டு எங்களுடைய கூட்டணி அறிவிப்பை முறையாக அறிவிப்போம். பெரியாரைப் பற்றி சீமான் பேசுவது அழகல்ல, அவர் அது போன்று பேசக்கூடாது, ஏன் பேசுகிறார் என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News