ஆளுநர் பேசுவதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் ஆதாரம் இல்லாவிட்டால் தமிழ்நாட்டை விட்டு போவதற்கு தயாரா? ஆளுநருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் காட்டம்
ஆளுநர் பேசுவதற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும் ஆதாரம் இல்லாவிட்டால் நீ தமிழ்நாட்டை விட்டு போவதற்கு தயாராக இருக்கிறாயா? என்பதுதான் நான் ஆளுநருக்கு வைக்கின்ற கேள்வி என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் காட்டமாக பேசியதுடன், ஆளுநருக்கு இரண்டு ஷூ வாங்கி தரவும் அமைச்சர் சிவசங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.;
அரியலூர், ஜன.26- அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு துறை செயலாளர் கவிதை பித்தன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட செயலாளருமான சிவசங்கர் சிறப்புரையாற்றினார் அப்பொழுது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்பட்டதன் காரணமாக தாய்மொழி இழந்த தலைமுறையாக இருக்கிறார்கள் மகாராஷ்டிராவில் மராத்தி என்ற மொழியை மறந்து போய் இந்தியில் பேசும் நிலை உள்ளது அதேபோல் பல்வேறு மாநிலங்களில் சொந்த மொழி மறந்து போய் அன்னிய மொழியான இந்தி திணிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது ஆனால் தமிழ்நாட்டில் முற்றிலும் தாய் மொழியில் தான் பேசுவோம் என பேசி தங்களது தாய் மொழியை காத்த காரணத்தால் தான் இரு மொழிக் கொள்கை காரணமாக இன்றைய கல்வியில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது உலக அளவில் கம்ப்யூட்டர் துறையில் தமிழ் மாணவர்கள் உயர்ந்திருக்கிறார்கள் அதற்குக் காரணம் இரு மொழி தான். இந்தி மொழி தேவையில்லாத சுமை இதனால் தாய் மொழியை காக்க தனது இன்னுயிரை ஈந்த தியாகிகளை போற்றும் வகையில் இந்த நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது ஒன்றிய அரசு நம் மீது பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியை திணித்தது போல் நம்முடைய பொருளாதாரத்தை தமிழ்நாட்டில் பெறக்கூடிய வருவாயை திருடி கொண்டு செல்கிறார்கள் அவர்களுக்கான ஒரு ஏஜென்ட்டாக ஆளுநரை தமிழ்நாட்டில் வைத்து நமக்கு என்ன தொந்தரவு கொடுக்கலாம் என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நேற்றைய முன் தினம் ஒன்று பேசுகிறார் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்கிறார் ஆனால் இன்று தமிழ்நாடு தீவிரவாதிகள் இருப்பிடமாக இருக்கிறது என்கிறார் தீவிரவாதிகள் இருப்பது மணிப்பூரில் அங்கு கவர்னராக இருந்த உன்னை அனைத்து கட்சிகளும் சேர்ந்து உன்னை விரட்டி அடித்தார்கள். மோடி அமித்ஷா ஏஜெண்டாக தமிழ்நாடு அரசு வரிப்பணத்தில் உனக்கு கொடுக்கின்ற சொகுசுகளை அனுபவித்துக் கொண்டு தமிழ்நாட்டில் இல்லாததை பொல்லாததையும் பேசிக்கொண்டு இருப்பதை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்தார் அதற்கு ஜன கன மன பாடவில்லை என சொன்னார் அந்த ஆளுக்கு அறிவு இருக்கா இல்லையா என்று சந்தேகமா இருக்கு அந்த ஆளுக்கு ஐபிஎஸ் எப்படி கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பிய அமைச்சர் சிவசங்கர் மரியாதை கொடுக்கின்ற முதல்வர் இருக்கிறபோதே ஆளுநர் திருப்பித் திருப்பி இதே மாதிரி நடந்து கொள்கிறார் என்றால் அந்த ஆளுநரை விரட்ட வேண்டிய காலம் வந்து கொண்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்துள்ளதால் பேசுகிறேன் திருவள்ளுவருக்கு காவி உடை போட்டு விட்டு இது தான் திருவள்ளுவர் உடை என்கிறார் சனாதனத்தை தூக்கிப்பிடிப்பேன் என்கிறார் தமிழ்நாட்டைப் போல் வட இந்தியாவில் பெண்கள் ஆணுக்கு நிகராக உட்கார முடியாது சரிசமமான மரியாதை கிடையாது என்ற நிலை தான் உள்ளது ஆனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கான அனைத்து வகை உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது அது ஆளுநருக்கு பிடிக்கல. ஏனா அவர் ஆர் எஸ் எஸ் கையால். ஆர் எஸ் எஸ் இன் கொள்கையான பெண்கள் படிக்கக் கூடாது சம உரிமை கொடுக்க கூடாது வேலைவாய்ப்பு கொடுக்க கூடாது என்பதுதான். இவையெல்லாம் நமது தமிழ்நாடு அரசு செய்கிறது பெண்கள் எல்லாம் கல்லூரி வரை படிப்பது ஆளுநருக்கு பிடிக்கல அதனால் தான் தமிழ்நாட்டில் நடக்காத விஷயங்களை புரளி கிலப்புவதை ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறார் தான் சொல்வது எதுவும் எடுபடாமல் போனாலும் வாரம் ஒரு முறை எதையாவது அள்ளிப் கொட்டி பேசுவதை ஒரு வேலையாக வைத்து இருக்கிற ஆளுநர் ரவிக்கு இந்த மேடையில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நீ பேசி இருப்பதற்கு எல்லாம் எதாவது ஆதாரத்தை காட்டினால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம் ஆதாரம் இல்லாவிட்டால் நீ தமிழ்நாட்டை விட்டு போவதற்கு தயாராக இருக்கிறாயா என்பதுதான் நான் ஆளுநருக்கு வைக்கின்ற கேள்வி தொழில் முதலீடு வரவில்லை என ஆளுநர் சொல்றார் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வெளிநாட்டு முதலீடு கொண்டு வந்துள்ள காட்சியை பார்த்து ஒன்றிய அரசாங்கம் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறான் இந்தியாவிலேயே அதிக அந்நிய முதலீடு வந்துள்ளது தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே கல்வியில் அதிகம் முன்னேறி இருப்பது தமிழ்நாடு தான் இது ஒன்றிய அரசாங்கம் சொன்னது. மோடி அரசாங்கம் சொல்வது ஒரு பக்கம் இவன் சொல்வது ஒரு பக்கம் ஜெயங்கொண்டம் அருகே செயற்கை காலனி பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது அது வெளிநாட்டு கம்பெனி ஒன்று தான் ஆரம்பித்துள்ளது பெரம்பலூருக்கு பக்கத்தில் எறையூரில் ஷீ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் வேலைக்குச் சென்று வருகிறார்கள் ஏன் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது இங்க தொழில் தொடங்கினால் தொழிலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை பணியாற்றுவதற்கு படித்து தொழில்நுட்பம் தெரிந்த வேலையாட்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் தான் தமிழ்நாட்டை நாடி உலக அளவில் இருக்கின்ற நிறுவனங்கள் வருகிறது இதை எல்லாம் பார்த்துட்டு சொல்லுறியே ரவி நீ வேண்டும் என்றால் வா பெரம்பலூர் ஷூ தயாரிக்கும் கம்பெனிக்கு கொண்டு போய் காட்டுகிறேன் உனக்கு வேண்டுமென்றாலும் இரண்டு ஷு பரிசாக வாங்கி தரேன் என பேசினார். இந்த நல்லாட்சி தொடர்ந்து நடந்தால் தமிழகத்தில் பிஜேபி என்ற கட்சியே இருக்காது என்பதற்காக தான் எதையாவது சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என ஆளுநரை கடுமையாக அமைச்சர் சிவசங்கர் தாக்கி பேசினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி ராமராஜன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், சட்ட திட்ட திருத்தக் . குழு இணை செயலாளர் சுபா .சந்திரசேகர், தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர