ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு.
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;
அரியலூர் ஜன.26- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிற்கு இணங்க, கல்லூரிக் கல்வி ஆணையர் ஆணையின் படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாக அனுசரிக்கப்படுவதால், கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கணினி அறிவியல் துறை மாணவர் வாக்காளர் உறுதிமொழியை வாசிக்க மாணவ-மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.