கானை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது;
காணை அடுத்த ஆயந்தூா் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீஸாா் சனிக்கிழமை ஆயந்தூா் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில், அந்தக் கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, ஒரு கிலோ அளவிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரான ஆயந்தூா், பிடாரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரவி மனைவி மங்கையை (38) கைது செய்தனா்.